நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

முயற்சி மறவாதே 

பயிற்சி குறைக்காதே

அயற்சி கொள்ளாதே

உள்ளம் தளராதே!!!

கற்றவை மறக்காதே

பெற்றதை உதறாதே

மற்றதை நினையாதே!!

அன்பை விலக்காதே

அகந்தையை தொடராதே!!!

கொள்கையில் மாறாதே

கொடுப்பதை மறக்காதே!!

உயிர் தனை பழிக்காதே

உற்றதை வெறுக்காதே!!

சிறகினை சுருக்காதே

சிந்திக்க தயங்காதே

யாரையும் ஏசாதே

யாசகம் கேட்காதே!!!

தேடுதலை விடாதே

தேவையை சுருக்காதே!!

மொழியை மறக்காதே

அதிகம் பேசாதே

அறியாமை வளர்க்காதே!!!

மனிதம் மறவாதே

வஞ்சம் போற்றாதே

நெஞ்சம் பொய் க்காதே..

நீதியுண்டு மறக்காதே!!"". *பொன்மொழி* : நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.                     

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு