அரச மரம்
அரச மரம் "அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது...." "ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.... நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்... மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில் இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்... எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவேகூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய...