Posts

Showing posts from June, 2024

நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது

 காலை நேர சிந்தனை ( 20.04.2024) நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என ஆத்திசூடி கற்றுத் தருவதை நமது நினைவூட்டலுக்காகத் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது.  1. ஔவியம் பேசேல்:  ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே. 2. கண்டொன்று சொல்லேல்: பார்க்காததைத் பார்த்தது போலப் பேசாதே. (பொய்ச் சாட்சி சொல்லாதே). 3. ஞயம்பட உரை:  கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு. 4. வஞ்சகம் பேசேல்:  உண்மைக்குப் புறம்பான கவர்ச்சிகரமான சொற்களைப் பேசி ஏமாற்றாதே. 5. கோதாட்டு ஒழி:  கபட நாடகம் ஆடுவதை நிறுத்து. 6. சித்திரம் பேசேல்:  பொய்யான வார்த்தைகளை உண்மை போலப் பேசாதே. 7. சுளிக்கச் சொல்லேல்: கேட்பவருக்குக் கோபமும் அருவெறுப்பும் உண்டாகும்படி பேசாதே. 8. சையெனத் திரியேல்: பெரியோர்கள் "ச்சீ" என வெறுக்கும் படி வீணாய் பேசித் திரியாதே. 9. சொற்சோர்வு படேல்:  பிறருடன் பேசும் பொழுது நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே. 10. தெய்வம் இகழேல்:  இறைவனை இகழ்ந்து பேசாதே. 11. நொய்ய உரையேல்:  அற்பமான வார்த்தைகளைப் பேசாதே. 12. பழிப்பன பகரேல்:  பொய், கடுஞ்...