Posts

Showing posts from December, 2020

நல்வழி

நூல்: நல்வழி ஆசிரியர்: ஔவையார் பாடல்: புண்ணியம் ஆம்.... பாடல்: 2 புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல்.  பொருள்: மண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள் எல்லாம் போன பிறவியில் செய்த புண்ணியம், பாவம் என்னும் இரண்டை.த் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. எனவே தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும். நூல்: நல்வழி ஆசிரியர்: ஔவையார் பாடல்:26 பாடல்: ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு விளக்கம்:  ஒருவன் தன் வருமானத்தை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து, போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேசுவதையே தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கும் ஆகாதவனாய் மாறிவிடுவான்....

கரிநாள் கணக்கிடும் முறையும்*...! *செய்யக்கூடாத செயல்களும்

கரிநாள் கணக்கிடும் முறையும்*...!  *செய்யக்கூடாத செயல்களும்*...! 🌞 சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணிக்கப்படுகிறதோ அதே போல சூரியனை அடிப்படையாக வைத்து கரிநாள் கணிக்கப்படுகிறது.  🌞 சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதில்லை, முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. அதே போல் கரிநாளில் சுபகாரியங்கள் செய்வதில்லை. 🌞 மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுள் பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரட்டாதி போன்ற சில நட்சத்திரங்களும், 15 திதிகளுக்குள் அஷ்டமி, நவமி போன்ற சில திதிகளும், 7 கிழமைகளுக்குள் செவ்வாய், சனி போன்ற சில கிழமைகளும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றுக்கும் விலக்கப்பட வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 🌞 அதைப்போலவே, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சில நாட்களில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதையே கரிநாள் என்று கூறுகிறார்கள்.  🌞 கரிநாள் என்பது திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே.  🌞 கரிநாள் என்றால் நஞ்சு ...

நாழிகை

நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும். தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர். தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, ஒரு நாளில் (பகல் + இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன. 1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம் = 216000 விலிப்தம் = 12960000 பரா = 777600000 தத்பரா[1] 2.5 நாழிகைகள் = 1 ஓரை = 1 மணித்தியாலம் = 60 நிமிடங்கள் 3.75 நாழிகைகள் = 1 முகூர்த்தம் 7.5 நாழிகைகள் = 2 முகூர்த்தம் = 1 சாமம் 60 நாழிகைகள் = 8 சாமம் = 2 பொழுதுகள் = 1 நாள் 15 நாள் = 1 பட்சம் = 0.5 மாதம் 1 மனித ஆயுள் வட்டம் = 120 வருடங்கள் = 2 வட்டங்கள் = 240 அயனங்கள் = 1440 மாதங்கள்

மனதி லுறுதி வேண்டும்

மனதி லுறுதி  வேண்டும், வாக்கினிலே இனிமை  வேண்டும்... நினைவு  நல்லது  வேண்டும், நெருங்கின  பொருள்  கைப்பட  வேண்டும்... கனவு  மெய்ப்பட  வேண்டும், கைவசமாவது  விரைவில்  வேண்டும்... தனமும்  இன்பமும்  வேண்டும், தரணியிலே  பெருமை  வேண்டும்... கண் திறந்திட  வேண்டும், காரியத்தி  லுறுதி  வேண்டும்... பெண்  விடுதலை  வேண்டும், பெரிய கடவுள்  காக்க  வேண்டும்... மண் பயனுற  வேண்டும், வானகமிங்கு  தென்பட  வேண்டும்... உண்மை  நின்றிட  வேண்டும். ஓம் ஓம் ஓம்  இன்று நம் தேசியகவி பாரதி பிறந்த நாள்... அவரின் கனவுகள் கற்பனைகள் கருத்துக்கள் அத்தனையும் நிஜமாக்க... மனதில் உறுதி கொள்வோம்.... அன்புடன் காலை வணக்கம்.

மூதுரை

நூல்: மூதுரை ஆசிரியர்: ஔவையார் பாடல்: நீரளவே ஆகுமாம்...... பாடல் : 7 நீரளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம் விளக்கம்: நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் அல்லிப்பூ வளரும். நாம் கற்ற நூல்களின் அளவுதான் நமது அறிவு இருக்கும். முற்பிறப்பில் செய்த புண்ணியங்களின் அளவுதான் நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். நாம் தோன்றிய குலத்தைப் பொறுத்து தான் நமது குணம் அமையும். நூல்: மூதுரை ஆசிரியர்: ஔவையார் பாடல்: நஞ்சுடைமை தானறிந்து....  பாடல: 24 நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறம்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். விளக்கம்: தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து வாழும். விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்துத் தானும் மறைந்து வாழ்வர்., குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர். நாள்: 23.12.2020 இன்பம்...

English to Tamil

Image