தெய்வத்தின் பார்வையில்
தெய்வத்தின் பார்வையில்... எது நல்ல நேரம்? * நல்லதை நினைக்கும் போது..! * நல்லதை பார்க்கும் போது..! * நல்லதை கேட்கும் போது..! * நல்லதை பேசும் போது..! * நல்லதை செய்யும் போது..! வாழ்த்த பழகிக் கொண்டால் எல்லா நேரமும் "நல்ல நேரம்" எது இராகு காலம்? * அகங்காரம் கொள்ளும் போது..! * கோபம் உச்சத்தை தொடும் போது..! * பாசம் கண்களை மறைக்கும் போது..! * ஆசைகள் எல்லையை மீறும் போது..! * தேக கவர்ச்சியினால், கவர்ச்சியில் மூழ்கும் போது..!! எது குளிகை? * கவலைப்படும் நேரம்.. * பயப்படும் நேரம்... * கலங்கும் நேரம்... * முயலாத நேரம்... எது எமகண்டம்? * பொறாமைப்படும் போது... * புறம் கூறும் போது... * கோள்சொல்லும் போது... * சதி செய்யும் போது... எது பிரம்மமுகூர்த்தம்? * தாய் தந்தை மதித்து பேணி காக்கும் காலம்... * கடமையில் வழுவாத காலம்... * இறையுணர்வோடு அறவழியில் பொருள் சேர்க்கும் காலம்... எது சுபமுகூர்த்தம்? * சுயநலம் கருதாது பொதுநலம் கருதி பிறர்க்கு சேவை செய்யும் நேரம்... * சம்பாதிப்பதில் கொஞ்சத்தை ஒதுக்கி தானம், தர்மம் செய்யும் நேரம்... வாழ்க வளமுடன்