நாலடியார்
நூல்: நாலடியார் இயற்றியவர்: சமண முனிவர்கள் அதிகாரம்: தாளாண்மை பாடல்: உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால் கால்தொழில் என்று கருதற்க கையினால் மேல் தொழிலும் ஆங்கே மிகும். சொற்பொருள்: உறுபுலி - வலிமை மிக்க புலி ஊனிரை - மாமிச உணவு சிறு தேரை - சிறிய தவளை கால்தொழில் - சிறிய தொழில் கருதற்க - எண்ண வேண்டாம் பாடல்பொருள்: வலிமை பொருந்திய புலியும் தனக்குரிய இறைச்சியுணவு ஒரு நாள் கிடைக்கவில்லையெனில் சிறிய தேரையைப் பிடித்துத் தின்னும், ஆதலால் அறிவினால் ஆராய்ந்து எந்தச் சிறிய தொழிலையும் அற்பமான தொழில் என்று எண்ணவேண்டாம். அந்த அற்பமான தொழிலும் ஒருவனது முயற்சியால் உயர்ந்த தொழிலாக மேம்படும். நூல்: நாலடியார் ஆசிரியர் : சமண முனிவர்கள் அதிகாரம் : செல்வம் நிலையாமை நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. சொற்பொருள்: ஒன்றின - பொருந்துவன, செறுத்துடன் - சினத்துடன் கூற்று - எமன் பாடல்பொருள் உலகில் நிலைபெற்றலை நிலைபெற்றவை என்று நினைக்கும் பொருள்கள் எல்லாமே, நிலையற்று ஒருநாள் அழிந்து ப...