விவேகசிந்தாமணி


நூல்: விவேகசிந்தாமணி
ஆசிரியர் : அறியப்படவில்லை
பாடல்: 21

கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொற்பேதை யருக்கு அறிவிங்கு இனிதாக வருமெனவே சொன்னாலும்
நற்போதம் வாராது அவர்குணமே மேலாக நடக்கும் தானே.

பாடல்பொருள்: 

கற்பூரத்தை வயலாகப் பரப்பி அதில் பாத்தி கட்டி, மான் வயிற்றில் பிறக்கும் மணப்பொருளாம் கஸ்தூரியை எருவாகப் போட்டு, மணம் கமழும் வாசனை திரலியங்களை நீராகப் பாய்ச்சி, அதில் அழகாக வெங்காயத்தை நட்டு வளர்த்தாலும், வெங்காயத்தின் மணம் போகுமா? போகாது. அதுபோல அறிவற்ற மூடருக்கு எவ்வளவுதான் இனிமையாக அறிவுரை சொன்னாலும், அவருக்கு நல்லறிவு என்பது வராது. அவர் குணமே மேலோங்கி நிற்கும்.

த.முத்துபாண்டி,
தமிழாசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி
பூதலாபுரம்
தூத்துக்குடி மாவட்டம்

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு