Posts

Showing posts from August, 2020

கணியன் பூங்குன்றனார்

*கணியன் பூங்குன்றனார்*  சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி  சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் இது.  *யாதும் ஊரே யாவரும் கேளிர்* இதன் முதல் வரி மட்டுமே பிரபலம். பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச்  சொல்கிறது. முழு பாடலும் அதன் பொருளும்👇. *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,* *தீதும் நன்றும் பிறர்தர வாரா,* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,* *சாதலும் புதுவது அன்றே,* *வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,*  *முனிவின் இன்னாது என்றலும் இலமே*  *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்* *ஆதலின் மாட்சியின்* *பெயோரை வியத்தலும் இலமே,* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* *பொருள்*👇 *"யாதும் ஊரே யாவரும் கேளிர்"*  எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவ...

முதலைக் கண்ணீர் வடிப்பது போல

முதலைக் கண்ணீர் வடிப்பது போல யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவது அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் பணத்தை போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.