Posts

Showing posts from November, 2020

தமிழின் மகத்துவம்

ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்  ‘இலை’என்று பெயர்.   அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை  ‘கீரை’ ஆகின்றது.  மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப்  ‘பூண்டு’ என்று பெயர்  அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள்  ‘புல்’ ஆகின்றன.  மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்  ‘தழை’.  நெல், வரகு முதலியவற்றின் இலைகள்  ‘தாள்’ ஆகும்.  சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்  ‘மடல்’.  கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘ தோகை’ என்றாகின்றது.  தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள்  ‘ஓலை’ என்று சொல்லப்படுகின்றன.  இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல,  தாவரவியல் அறிவியலும்  அடங்கி இருக்கிறது..  இதுவே தமிழின் மகத்துவம்.

எது கெடும்

*எது கெடும்* பாராத பயிரும் கெடும் பாசத்தினால் பிள்ளை கெடும் கேளாத கடனும் கெடும் கேட்கும்போது உறவு கெடும் தேடாத செல்வம் கெடும் தெகிட்டினால் விருந்து கெடும் ஓதாத கல்வி கெடும் ஒழுக்கமில்லா வாழ்வு கெடும் சேராத உறவும் கெடும் சிற்றின்பன் பெயரும் கெடும் நாடாத நட்பும் கெடும் நயமில்லா சொல்லும் கெடும் கண்டிக்காத பிள்ளை கெடும் கடன்பட்டால் வாழ்வு கெடும் பிரிவால் இன்பம் கெடும் பணத்தால் அமைதி கெடும் சினமிகுந்தால் அறமும் கெடும் சிந்திக்காத செயலும் கெடும் சோம்பினால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் மோகித்தால் முறைமை கெடும் முறையற்ற உறவும் கெடும் அச்சத்தால் வீரம் கெடும் அறியாமையால் முடிவு கெடும் உழுவாத நிலமும் கெடும் உழைக்காத உடலும் கெடும் இறைக்காத கிணறும் கெடும் இயற்கையழிக்கும் நாடும் கெடும் இல்லாலில்லா வம்சம் கெடும் இரக்கமில்லா மனிதம் கெடும் தோகையினால் துறவு கெடும் துணையில்லா வாழ்வு கெடும் ஓய்வில்லா முதுமை கெடும் ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் அளவில்லா ஆசை கெடும் அச்சப்படும் கோழை கெடும் இலக்கில்லா பயணம் கெடும் இச்சையினால் உள்ளம் கெடும் உண்மையில்லா காதல் கெடும் உணர்வில்லாத இனமும் கெடும் செல்வம்போன...

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்  =============================== 01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி. 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை. 08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது. 09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம். 10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். 11 கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு. 12. கடல் - (Sea) சமுத்திரம். 13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர். 14. கலிங்கு - (Sluice with many...

தமிழ் மொழியின் சிறப்புப் பெயர்கள்

🎀🎊🎀🎊🎀🎊🎀🎊 *தமிழ் மொழியின்* *சிறப்புப் பெயர்கள்:* 1) *அந்தமிழ்:-*  அம் + தமிழ் =  அழகிய தமிழ் 2) *அருந்தமிழ்:-*  அருமை + தமிழ் =  அருமைபாடுடைய தமிழ் 3) *அழகுதமிழ்:-*  எல்லாவகையிலும்  அழகுநலம் மிக்க தமிழ் 4) *அமுதத்தமிழ்:-*  அமுதம் போன்று  வாழ்வளிக்கும் தமிழ் 5) *அணித்தமிழ்:-*  அணிநலன்கள் அமைந்த  தமிழ், தமிழினம் பெருமிதமுறும்  அணியாக இலங்கும் தமிழ் 6) *அன்னைத்தமிழ்:-*  நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம்  அன்னையாகவும்  விளங்கும் தமிழ் 7) *இசைத்தமிழ்:-*  முத்தமிழில் ஒரு பிரிவு  (இசை மொழியின் கூறாவது  ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு) 8) *இயற்றமிழ்:-*  முத்தமிழின் மற்றொரு பிரிவு.  ஆயகலை அறுபத்து நான்கும்  அவற்றின் வழிவந்தனவும்  உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது 9) *இன்றமிழ்:-* இனிக்கும் தமிழ்  (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க  என எதற்கும் இனியது) 10) *இன்பத் தமிழ்:-* இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண  இலக்கிய மரபும் கொண்டு,  கற்பவர...