தமிழ் மொழியின் சிறப்புப் பெயர்கள்
🎀🎊🎀🎊🎀🎊🎀🎊
*தமிழ் மொழியின்*
*சிறப்புப் பெயர்கள்:*
1) *அந்தமிழ்:-*
அம் + தமிழ் =
அழகிய தமிழ்
2) *அருந்தமிழ்:-*
அருமை + தமிழ் =
அருமைபாடுடைய தமிழ்
3) *அழகுதமிழ்:-*
எல்லாவகையிலும்
அழகுநலம் மிக்க தமிழ்
4) *அமுதத்தமிழ்:-*
அமுதம் போன்று
வாழ்வளிக்கும் தமிழ்
5) *அணித்தமிழ்:-*
அணிநலன்கள் அமைந்த
தமிழ், தமிழினம் பெருமிதமுறும்
அணியாக இலங்கும் தமிழ்
6) *அன்னைத்தமிழ்:-*
நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம்
அன்னையாகவும்
விளங்கும் தமிழ்
7) *இசைத்தமிழ்:-*
முத்தமிழில் ஒரு பிரிவு
(இசை மொழியின் கூறாவது
ஏனைய மொழிகளுக்கு
இல்லாத சிறப்பு)
8) *இயற்றமிழ்:-*
முத்தமிழின் மற்றொரு பிரிவு.
ஆயகலை அறுபத்து நான்கும்
அவற்றின் வழிவந்தனவும்
உணர்த்தும் அறிவுநூல்கள்
அடங்கியது
9) *இன்றமிழ்:-*
இனிக்கும் தமிழ்
(ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க
என எதற்கும் இனியது)
10) *இன்பத் தமிழ்:-*
இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண
இலக்கிய மரபும் கொண்டு,
கற்பவர்க்கு எஞ்ஞான்றும்
இன்பம் பயப்பது.
11) *எந்தமிழ்:-*
எம் + தமிழ்
(கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)
12) *உகக்குந்தமிழ்:-*
மகிழ்ச்சியளிக்கும் தமிழ்
13) *ஒண்டமிழ்:-*
ஒண்மை + தமிழ்
(அறிவின் செறிவும் நுட்பமும்
கொண்டு ஒளிதரும் தமிழ்)
14) *கனித்தமிழ்:-*
கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்
15) *கற்கண்டுத்தமிழ்:-*
கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து
இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்
16) *கன்னித் தமிழ்:-*
எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம்
குன்றாமலும் விளங்கும் தமிழ்
17) *சங்கத்தமிழ்:-*
மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்
18) *சுடர்தமிழ்:-*
அறிவுக்கும் உணர்வுக்கும்
சுடர்தரும் தமிழ்
19) *சுவைத்தமிழ்:-*
சொற்சுவை, பொருட்சுவை,
கலைச்சுவை, கருத்துச்சுவை
என எல்லாச் சுவையும் செறிந்தது
20) *செந்தமிழ்:-*
செம்மை + தமிழ் =
எல்லா வகையிலும்
செம்மை உடையது
(செந்தமிழ் தகைமையால்
அன்றே செந்தமிழ் எனப்பட்டது
தமிழ்)
21) *செழுந்தமிழ்:-*
செழுமை + தமிழ் -
வளம் குன்றாத தமிழ்
22) *தனித்தமிழ்:-*
தன்னேரிலாத தனித்தன்மை
வாய்ந்த தமிழ்
23) *தண்டமிழ்:-*
தண்மை + தமிழ் -
குளிர்ச்சி நிறைந்தது
24) *தாய்த்தமிழ்:-*
தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்
25) *தீந்தமிழ்:-*
(தேன் > தேம் > தீம்)
இனிமை நிறைந்த தமிழ்
26) *தெய்வத்தமிழ்:-*
தெய்வத்தன்மை வாய்ந்தது
27) *தேன்தமிழ்:-*
நாவுக்கும் செவிக்கும்
சிந்தைக்கும் இனிமை
பயக்கும் தமிழ்
28) *பசுந்தமிழ்:-*
பசுமை + தமிழ் – என்றும்
தொடந்து செழித்து வளரும் தமிழ்
29) *பைந்தமிழ்:-*
பைம்மை + தமிழ்
(பசுமை > பைம்மை)
30) *பழந்தமிழ்:-*
பழமையும் தொடக்கமும்
அறியாத தொன்மையுடைய தமிழ்
31) *பாற்றமிழ்:-*
பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது
32) *பாகுதமிழ்:-*
வெம்மையிலும் வெல்லம்
உருகிப் பாகாகி மிகுசுவை
தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது
33) *நற்றமிழ்:-*
நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும்
பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது
34) *நாடகத்தமிழ்:-*
முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய்
உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும்
நிறைந்தது
35) *மாத்தமிழ்:-*
மா – பெரிய –
பெருமைமிக்க தமிழ்
(மங்கலப் பொருளுணர்த்தும்
உரிச்சொல் மா)
36) *முத்தமிழ்:-*
இயல், இசை, நாடகம் என
முத்திறம் கொண்டு
அமைந்த தமிழ்
37) *வண்டமிழ்:-*
வண்மை + தமிழ்
(வளஞ்செறிந்த தமிழ்)
38) *வளர்தமிழ்:-*
காலந்தொறும்
வளர்ந்துகொண்டே
வரும் தமிழ்.
தமிழின் சிறப்பும்..
தமிழனின் சிறப்பும்..
நாளும் போற்றுவோம்.
🎀🎊🎀🎊🎀🎊🎀🎊
Comments
Post a Comment