குலதெய்வம்
1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. 2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. 4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு. 5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை. 6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும். 7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான். 8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். 9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். 10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. 11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும். 12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. 13). குலதெய...