Posts

Showing posts from April, 2022

இன்பத் தமிழ்

இன்பத் தமிழ்...! தொடர்ந்து படியுங்கள்... 1. அந்தி, சந்தி:  அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.  சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.  2. அக்குவேர், ஆணிவேர் : அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.  ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர். 3. அரை குறை: அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது. குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.  4. அக்கம், பக்கம்: அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும். பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும். 5. அலுப்பு சலிப்பு : அலுப்பு: உடலில் உண்டாகும் வலி. சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.  6. ஆட்டம் பாட்டம் : ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது. பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது. 7. இசகு பிசகு: இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல். பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல். 8. இடக்கு முடக்கு:  இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல். முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல். 9. ஏ...