Posts

Showing posts from March, 2025

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்!

 வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.  13. அவ்வப்போது பரிசுகள் அளி.  14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. 15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்! 16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம். 17. உன் சொத...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?

 பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை? செல்வங்கள் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு பொருள். திருமணமான தம்பதியினர், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்யும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். அந்த 16 எதை குறிக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம். 🌷 புகழோடு வாழ வேண்டும். 🌷 கல்வியை கற்று வாழ்தல் வேண்டும். 🌷 தவறாத மக்கட்பேறு கிடைத்து வாழ வேண்டும். 🌷 வெற்றி, வீரத்துடன் வாழ்தல் வேண்டும். 🌷 நன்மைகளை பெற்று வாழ வேண்டும். 🌷 பொன்னோடும், பொருளோடும் வாழ வேண்டும். 🌷 வார்த்தை தவறாத நேர்மையுடன் வாழ வேண்டும். 🌷 நல்ல ஊழ் நமக்கு துணை நிற்க வேண்டும். 🌷 பாடுபட்டு தேடிய பலனை அனுபவிக்க பாக்கியம் வேண்டும். 🌷 பிறர் துன்பம் போக்கிட பரந்த மனம் வேண்டும். 🌷 பிறர் நம்மைக்கண்டு பழிக்காமல் வாழ்தல் வேண்டும். 🌷 பிற உயிர்களிடம் அன்பு செலுத்தி வாழ வேண்டும். 🌷 எதற்கும் கலங்காத மனவலிமை வேண்டும். 🌷 அடுத்தவர்களுக்கு அஞ்சாமல் வாழ வேண்டும். 🌷 நோயின்றி சுகமுடன் வாழ வேண்டும். 🌷 நீண்ட நாட்கள் முதிர்ந்த வயதோடு வாழ வேண்டும். இந்த 16 செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என்று புது...

நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

முயற்சி மறவாதே  பயிற்சி குறைக்காதே அயற்சி கொள்ளாதே உள்ளம் தளராதே!!! கற்றவை மறக்காதே பெற்றதை உதறாதே மற்றதை நினையாதே!! அன்பை விலக்காதே அகந்தையை தொடராதே!!! கொள்கையில் மாறாதே கொடுப்பதை மறக்காதே!! உயிர் தனை பழிக்காதே உற்றதை வெறுக்காதே!! சிறகினை சுருக்காதே சிந்திக்க தயங்காதே யாரையும் ஏசாதே யாசகம் கேட்காதே!!! தேடுதலை விடாதே தேவையை சுருக்காதே!! மொழியை மறக்காதே அதிகம் பேசாதே அறியாமை வளர்க்காதே!!! மனிதம் மறவாதே வஞ்சம் போற்றாதே நெஞ்சம் பொய் க்காதே.. நீதியுண்டு மறக்காதே!!"". *பொன்மொழி* : நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.                     

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

 என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதுல? - என்று யாராவது கேட்டால் அதற்கு இது தான் பதில்.: இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிவோம்.. 1. தேவாரம்  2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா  5. திருப்பாவை  6. திருவெம்பாவை  7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. கந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி  13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..! 1.நற்றிணை  2.குறுந்தொகை  3.ஐங்குறுநூறு  4.அகநானூறு  5.புறநானூறு  6.பதிற்றுப்பத்து  7.பரிபாடல்  8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை  5.முல்லைப்பாட்டு  6.மதுரைக்காஞ்சி  7.நெடுநல்வாடை  8.குறிஞ்சிப் பாட்டு  9.பட்டினப்பாலை  10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....! 1.திருக்குறள்  2.நாலடியார்  3.நான்மணிக்கடிகை  4.இன்னாநாற்பது...

தமிழ் தேன்

 *தமிழுக்கு தேன் என்றொரு பெயர் உண்டு.* *காரணம் ஏன் தெரியுமா?* *தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து, நேற்று ஏன்  *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார்.  அதற்கு அவர் கூறிய  *இனிமை பொருந்திய விடை...*   ஐயா நீங்கள்  கூறியதை நினைத் *தேன்* ! கொல்லிமலைக்கு நடந் *தேன்*! பல இடங்களில் அலைந் *தேன்*!                 ஓரிடத்தில் பார்த் *தேன்*! உயரத்தில் பாறைத் *தேன்*! எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்*! கொம் பொன்று ஒடித் *தேன்*!  ஒரு கொடியைப் பிடித் *தேன்* ! ஏறிச்சென்று கலைத் *தேன்*!   பாத்திரத்தில் பிழிந் *தேன்*! வீட்டுக்கு வந் *தேன்*!  கொண்டு வந்ததை வடித் *தேன்*! கண்டு நான் மகிழ்ந் *தேன்*! ஆசையால் சிறிது குடித் *தேன்* ! மீண்டும் சுவைத் *தேன்* ! உள்ளம் களித் *தேன்*!  உடல் களைத் *தேன்* ! உடனே படுத் *தேன்*! கண் அயர்ந் *தேன்*! அதனால் மறந் *தேன்*! காலையில் கண்விழித் *தேன்*! அப்படியே எழுந் *தேன்*! உங்களை நினைத் *தேன்*!  தேனை எடுத் *தேன்*! அங்கிருந்து விரைந் *தேன்*! வேகமாக நடந் *தேன்*! ...