தமிழ் தேன்

 *தமிழுக்கு தேன் என்றொரு பெயர் உண்டு.*


*காரணம் ஏன் தெரியுமா?*


*தேன்*

கொண்டு வந்தவரைப் பார்த்து,


நேற்று ஏன்

 *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். 


அதற்கு அவர் கூறிய 

*இனிமை பொருந்திய விடை...*  


ஐயா நீங்கள் 

கூறியதை நினைத் *தேன்* !


கொல்லிமலைக்கு நடந் *தேன்*!


பல இடங்களில் அலைந் *தேன்*!      

         

ஓரிடத்தில் பார்த் *தேன்*!


உயரத்தில் பாறைத் *தேன்*!


எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்*!


கொம் பொன்று ஒடித் *தேன்*! 


ஒரு கொடியைப் பிடித் *தேன்* !


ஏறிச்சென்று கலைத் *தேன்*!  


பாத்திரத்தில் பிழிந் *தேன்*!


வீட்டுக்கு வந் *தேன்*! 


கொண்டு வந்ததை வடித் *தேன்*!


கண்டு நான் மகிழ்ந் *தேன்*!


ஆசையால் சிறிது குடித் *தேன்* !


மீண்டும் சுவைத் *தேன்* !


உள்ளம் களித் *தேன்*! 


உடல் களைத் *தேன்* !


உடனே படுத் *தேன்*!


கண் அயர்ந் *தேன்*!


அதனால் மறந் *தேன்*!


காலையில் கண்விழித் *தேன்*!


அப்படியே எழுந் *தேன்*!


உங்களை நினைத் *தேன்*! 


தேனை எடுத் *தேன்*!


அங்கிருந்து விரைந் *தேன்*!


வேகமாக நடந் *தேன்*! 


இவ்விடம் சேர்ந் *தேன்*! 


தங்கள் வீட்டை அடைந் *தேன்*!


உங்களிடம் கொடுத் *தேன்*!


என் பணியை முடித் *தேன்*!


என்றார்..


அதற்கு ...


*தேன்*

பெற்றவர்


தேனினும் 


இனிமையாக உள்ளது 

உமது விடை !


இதனால் தான் 

நம் முன்னோர்கள் தமிழைத்


 தமிழ்த் *தேன்* 

 என்று உரைத்தரோ... 


எனக் கூறி

மகிழ்ந் *தேன்*. என்றார்.


💐

படித் *தேன்..*


படித்ததில் 

சுவைத் *தேன்*...!


உடனே

பகிர்ந் *தேன்* !🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு