தெய்வத்தின் பார்வையில்
தெய்வத்தின் பார்வையில்...
எது நல்ல நேரம்?
* நல்லதை நினைக்கும் போது..!
* நல்லதை பார்க்கும் போது..!
* நல்லதை கேட்கும் போது..!
* நல்லதை பேசும் போது..!
* நல்லதை செய்யும் போது..!
வாழ்த்த பழகிக் கொண்டால் எல்லா நேரமும் "நல்ல நேரம்"
எது இராகு காலம்?
* அகங்காரம் கொள்ளும் போது..!
* கோபம் உச்சத்தை தொடும் போது..!
* பாசம் கண்களை மறைக்கும் போது..!
* ஆசைகள் எல்லையை மீறும் போது..!
* தேக கவர்ச்சியினால், கவர்ச்சியில் மூழ்கும் போது..!!
எது குளிகை?
* கவலைப்படும் நேரம்..
* பயப்படும் நேரம்...
* கலங்கும் நேரம்...
* முயலாத நேரம்...
எது எமகண்டம்?
* பொறாமைப்படும் போது...
* புறம் கூறும் போது...
* கோள்சொல்லும் போது...
* சதி செய்யும் போது...
எது பிரம்மமுகூர்த்தம்?
* தாய் தந்தை மதித்து பேணி காக்கும் காலம்...
* கடமையில் வழுவாத காலம்...
* இறையுணர்வோடு அறவழியில் பொருள் சேர்க்கும் காலம்...
எது சுபமுகூர்த்தம்?
* சுயநலம் கருதாது பொதுநலம் கருதி பிறர்க்கு சேவை செய்யும் நேரம்...
* சம்பாதிப்பதில் கொஞ்சத்தை ஒதுக்கி தானம், தர்மம் செய்யும் நேரம்...
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment