காய்கறி குறள்கள்
காய்கறி" குறள்கள்
"தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில்
எக்காலும் நோயில்லை காண்."
🍅🌰🥑🥝🍈🍇🥦
"எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர்
எலும்புக்கு வலுசேர்க்கு மென்றும்."
🍓🍒🥑🥝🥥🥦🌶
"வெங்காயம் இல்லாச் சாம்பார் தங்காதே
எஞ்ஞான்றும் நாவில் ருசி."
🍅🥒🍄🌶🥒🥥🍉
"பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே
புடலங்காய் போற்றிச் சுவை."
🍄🌶🍊🍉🥥🥦
"தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய்
முள்ளங்கி மூன்றினைத் தான்."
🍄🥦🥒🍏🍍🥕🌶
"வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும்
தொண்டையில் இறங்காது காண்."
🍄🥑🍉🍈🍇🌶
"வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும்
வாழாதார் என்பது வழக்கு."
🍅🍌🍄🥒🌶🍎
"கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம்
இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்."
🌽🌰🍄🥝🥥🍈🍇
"பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில்
புகழோடு வாழ்வார் அவர்."
🍅🍌🍋🍊🍉🥝🥦
காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும்
நோய்நொடியில் வீழ்ந்து கெடும்."
🥥🍈🍉🍄🥦🥒🌶
"முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் மற்றோரெல்லாம்
வெறுங்கையில் முழம் போடுவர்."
🍑🍅🌰🥝🥥🍉🍌
"காரிருளில் கண் தெரிய வேண்டுமெனில்
பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச்சேர்."
🌽🍍🍊🍉🥝🥒🥦
"இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில்
கரும்பைப் போய் விரும்பிச்சுவை."
🌰🥔🍒🍑🍐🍏🥦
"உரிக்க உரிக்கத் தோல்தான் என்றாலும்
செரிக்குமோ வெங்காயம் உண்ணாவிடில்."
🥔🍓🍐🥥🍎🍍🥦
"பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்."
🍅🍋🍌🍍🍆🥦🥒
"பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார்
சோகத்தில் சேர்ந்து விழும்."
🍊🍉🥥🥝🥒🌶
"வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒருதுண்டு சேர்த்துச்சமை"
🍍🍐🍓🍇🥦🥒
"வாழ்வதனால் ஆய பயனென் கொல்
வாழைக்காய் தாழ்வேனென எண்ணு பவர்."
🍓🥦🌶🥥🍏🍉
"கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள்
தேரை வாழ்ந்த கதை"
🍋🍊🍉🍈🍆🍄
"பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும்
பீட்ரூட்டை உணவில் சமை.🙏ப
🍑🍐🍎🌽🥕🌶
"கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம்
சத்தெனவே சரியாய் உணர்."
🍅🍍🍉🍈🍇🥦
"கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர்
சொறி பிடித்தோடுவார் காண்."
🥕🍒🍑🍐🍏
"பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த
பொன்னாங் கண்ணியைச் சேர்."
🍉🍒🍋🍌🍍🥑
"கண் இருந்தும் குருடரே காசினியில காய்கறியை உண்ணாதவர்."
🙏🍄🥔🍒🍊🍏🥦🙏எளியேன் சிவ.பா.காந்தி
Comments
Post a Comment