இரட்டை சொற்கள்!
🦜.. இரட்டை சொற்கள்! ..🦜
🍀. குண்டக்க
மண்டக்க :
🔸குண்டக்க : இடுப்புப்பகுதி,
🔸மண்டக்க: தலைப்
பகுதி,
சிறுவர்கள்
கால் பக்கம், தலைப்பக்கம் எது
என தெரியாமல் தூக்குவது,
வீட்டில்
எந்த எந்த பொருள் எங்கே
எங்கே இருக்க வேண்டிய இடத்தில்
இல்லாமல் இருப்பதுதான்...
🍀. அந்தி,
சந்தி:
🔸அந்தி : . மாலை
நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது..
🔸சந்தி: . இரவு
நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில்
உள்ள விடியல் பொழுது..
🍀. அக்குவேர்,ஆணிவேர்:🔸
அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்...🔸 ஆணி
வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும்
வேர்...
🍀. அரை
குறை:
🔸 அரை : ஒரு
பொருளின் சரி பாதி அளவில்
உள்ளது..🔸 குறை
: அந்த சரிபாதி அளவில் குறைவாக
உள்ளது...
🍀. அக்கம்,
பக்கம்:
🔸 அக்கம்: தன்
வீடும், தான் இருக்கும் இடமும்...
🔸 பக்கம்: பக்தத்தில்
உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்...
🍀 கார
சாரம் :
🔸காரம் : உறைப்பு
சுவையுள்ளது...
🔸சாரம்: காரம்
சார்ந்த சுவையுள்ளது...
🍀.இசகு
பிசகு:
🔸 இசகு: தம்
இயல்பு தெரிந்து ஏமாற்றறுபவர்களிடம் ஏமாறுதல்...
🔸 பிசகு: தம்முடைய
அறியாமையால் ஏமாறுதல்...
🍀 .இடக்கு
முடக்கு:
🔸 இடக்கு : கேளியாக
நகைத்து, இகழ்ந்து பேசுதல்...
🔸 முடக்கு : கடுமையாக
எதிர்த்து .தடுத்து பேசுதல்...
🍀. ஆட்டம்
பாட்டம் :
🔸 ஆட்டம் : தாளத்திற்கு
தகுந்தவாறு ஆடுவது...
🔸பாட்டம் : ஆட்டத்திற்கு
பொருத்தமில்லாமல் பாடுவது...
🍀. அலுப்பு
சலிப்பு :
🔸. அலுப்பு: உடலில்
உண்டாகும் வலி...
🔸. சலிப்பு: உள்ளத்தில்
ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,..
🍀. தோட்டம்
துரவு , தோப்புது ரவு,
🔸 தோட்டம் : செடி,
கொடி கிரை பயிரிடப்படும் இடம்...
🔸தோப்பு : கூட்டமாக
இருக்கும் மரங்கள்...
🔸துரவு: கிணறு...
🍀. காடு
கரை :
🔸 காடு : மேட்டு
நிலம் (முல்லை)...
🔸 கரை : வயல்
நிலம் .( மருதம், நன் செய்
, புன்செய்)...
🍀.காவும்
கழனியும்:
🔸 கா : சோலை...
🔸 கழனி: வயல்..
(மருதம் )...
🍀 நத்தம்
புறம்போக்கு :
🔸 நத்தம் : ஊருக்குப்
பொதுவான மந்தை...
🔸 புறம்போக்கு : ஆடு,
மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்...
🍀 பழக்கம்
வழக்கம் :
🔸 பழக்கம் : ஒருவர்
ஒரே செயலை பல காலமாக
செய்வது...
🔸 வழக்கம் : பலர்
ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக
) கடைப்பிடித்தது செய்வது..
🍀சத்திரம்
சாவடி :
🔸 சத்திரம் : இலவசமாக
சோறு போடும் இடம் ( விடுதி
)...
🔸 சாவடி: இலவசமாக
தங்கும் இடம்...
🍀. நொண்டி
நொடம் :
🔸. நொண்டி : காலில்
அடிபட்டோ, குறையால் இருப்பவர்....
🔸. நொடம் : கை,
கால் . செயல் சுற்று இருப்பவர்..
🍀. பற்று
பாசம் :
🔸 பற்று :நெருக்கமாக
உறவு கொண்டுள்ளவர்கள்...
🔸 பாசம் : பிரிவில்லாமல்
மரணம் வரை சேர்ந்து இருப்பது...
🍀 ஏட்டிக்கு
போட்டி :
🔸 ஏட்டி: விரும்பும்
பொருள் அல்லது செய்வது... ( ஏடம்
: விருப்பம்)
🔸 போட்டி : விரும்பும்
பொருள். செயலுக்கு எதிராக வருவது தான்...
கிண்டலும் கேலியும்:
🔸 கிண்டல் : ஒருவன்
மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து
வாங்குவது....
🔸 கேலி : எள்ளி
நகைப்பது,..
🍀. ஒட்டு
உறவு :
🔸 ஒட்டு : இரத்த
சம் பந்தம் உடையவர்கள்...
உறவு :
கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்மமானவர்கள்...
🍀 பட்டி
தொட்டி :
🔸 பட்டி: கால்நடைகள்
(ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)...
🔸 தொட்டி : மாடுகள்
அதிமாக வளர்க்கும் இடம்...
🍀 கடை
கண்ணி :
🔸 கடை: தனித்
தனியாக உள்ள வியாபார நிலையம்...
🔸 கண்ணி : தொடர்ச்சியாக
அமைந்த கடைகள் , கடை வீதிகள்...
🍀 பேரும்
புகழம் :
🔸 பேர் : வாழ்ந்து
கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை..
🔸 புகழ்: வாழ்விற்கு
பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை....
🍀. நேரம்
காலம் :
🔸 ஒரு செயலைச்
செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து
கெள்வது (Time,..
🔸 காலம் : ஒரு
செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால
அளவு..
🍀 பழி
பாவம் :..
🔸 பழி: நமக்கு
தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலை செய்தால் இக்காலத்தில்
உண்டாகும் அபச் சொல்...
🔸 பாவம், : தீயவை
செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி...
🍀 கூச்சல்
குழப்பம்:
🔸 கூச்சல் : துன்பத்தில்
சிக்கி வாடுவோர் போடும் சத்தம்... (கூ
- கூவுதல்)
🔸 குழப்பம்: துன்பத்தின்
மத்தியில் உண்டாகும் சத்தத்தை கேட்டு, வந்தவர்கள் போடும்
சத்தம்...
🍀 நகை
நட்டு :
🔸 நகை : பெரிய
அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியானம்.)
🔸 நகை : சிறிய
அணிகலன்கள்..
🍀 பிள்ளை
குட்டி:
🔸பிள்ளை : பெதுவாக
ஆண் குழந்தையை குறிக்கும்...
🔸 குட்டி: பெண்
குழந்தையை குறிக்கும்...
🍀 பங்கு
பாகம்:
🔸 பங்கு: கையிருப்பு..
பணம்,நகை, பாத்திரம்.( அசையும்
சொத்து)...
🔸 பாகம் : வீடு,
நிலம்.. அசையா சொத்து...
🍀வாட்டம்
சாட்டம் :
🔸 வாட்டம் : வளமான
தோற்றம், வாளிப்பான உடல்...
🔸 சாட்டம் : வளமுள்ள
கனம். தோற்றப் பொலிவு...
🍀. காய்
கறி :
🔸 காய்: காய்களின்
வகைகள்...
🔸 கறி : சைவ
உணவில் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகள்...
🍀 ஈவு
இரக்கம் :
🔸 ஈவு : (ஈதல்)
கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்...
🔸 இரக்கம் : பிற
உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்...
🍀 பொய்யும்
புரட்டும்:
🔸 பொய்: உண்மையில்லாததை
கூறுவது...
🔸 புரட்டு : ஒன்றை
நேருக்கு மாறாக மாற்றி பொய்யை
உண்மை யென கூறி நடிப்பது...
🍀 சூடு
சொரனை:
🔸 சூடு : ஒருவர்
தகாதசெயல், சொல்லை செய்யும்போது உண்டாகும்
மனகொதிப்பு...
🔸 சொரனை: நமக்கு
ஏற்படும் மான உணர்வு,,,
தரணி புகழ் தேனினும் இனிய
தமிழில் எந்த ஒரு வார்த்தையும்
காரண காரியமின்றி சொல்லபடுவதேயில்லை. செம்மொழியாம் தமிழ்
**
Comments
Post a Comment